காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் எல்லோருமே பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் பெறுவதற்காக மேலதிகாரிகளுக்கு இணக்கமாக செயல்படுவதாக சவுக்கு சங்கர் பேசியதை யாருமே ஆதரிக்கவில்லை. எனவே காவல் துறை வழக்கு தொடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
சவுக்கு சங்கர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் செருப்பு போராட்டம்
முன்பு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடம் இருந்தும் நடுநிலை அரசியல் விமர்சகர்களிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இந்த முறை கைதுக்கு பெரிய ஆதரவு நிலை இல்லை.
காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் எல்லோருமே பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் பெறுவதற்காக மேலதிகாரிகளுக்கு இணக்கமாக செயல்படுவதாக சவுக்கு சங்கர் பேசியதை யாருமே ஆதரிக்கவில்லை. எனவே காவல் துறை வழக்கு தொடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
முன்னர் நீதிபதிகள் அவதூறு வழக்கு போடப்பட்ட காலத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட சீமான் மற்றும் பல அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், இன்று அ.தி.மு.க.வினர் மட்டுமே ஆதரவு தருகிறார்கள்.
இது ஏன் என்று சமூக வலைதளத்தில் ஒரு செய்தி பரவுகிறது. அவர் ஆளும் கட்சியை விமர்சனம் செய்தது சரி என்றாலும், ஊழல் அதிமுக உடன் இணக்கமாக சென்றது அவரின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கி உள்ளது. 2021ல், அதிமுகவை ஒழிக்க திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தார்.
நியாயமாக தேர்தலை எதிர்கொண்ட கமல்ஹாசன் மீது பல்வேறு அவதூறுகளை பேசினார். இன்று திமுகவை ஒழிக்க அதிமுக ஆதரவு நிலைப்பாடு. அரசியல்வாதிகள் மாறி மாறி கூட்டணி வைக்கலாம். கள்ளக் கூட்டணியும் அடக்கம். அவர்களுக்கு வெட்கம் இல்லை. சவுக்கு போன்ற தைரியமான ஆட்கள், அவரை பின்தொடரும் பெரும்பாலான இளைஞர்களுக்கு எது நல் அரசியல் என்று வழி காட்டி இருக்க வேண்டும்.
சவுக்கை விட, மிக ஆபாசமான அவதூறுகளை பேசி வரும், பாஜக மீது பெரிய நடவடிக்கை எதுவும் திமுக இது வரை எடுக்கவில்லை. ஏனென்றால் அரசியல். நீதிமன்ற அவதூறு வழக்கில் இருந்து விடுதலையான சவுக்கு, ஆபாச வார்த்தைகள் பேசுவதை நிறுத்தி கொண்டார். இந்த முறை வெளிய வரும்போது, ஒரு சார்பு நிலை எடுக்காமல் மீண்டும் அவர் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வினை விதைத்தவன், வினை அறுப்பான்! சவுக்கு அரசியல்வாதிகளை நம்பாமல், மக்களை மட்டுமே நம்பி செயல்பட வேண்டும் என்று கூறிவருகிறார்கள்