சுடிதாருடன் கலக்கல் போஸ்! வைரலாகும் சசிகலா புகைப்படம்? எங்கு, யார் எடுத்தது தெரியுமா?

சிறையில் சசிகலா சுடிதார் அணிந்தபடி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூருவில் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வசித்து வரும் முதல் நாளிலிருந்தே அவருக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படுவதாகும், அவர் தாராளமாக வெளியே சென்று வருவதாகவும், சலுகைகளை பெறுவதற்காக பல நபர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல்கள் குறித்து பெங்களூரு சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சலுகைகளை பெறுவதற்கு சசிகலா லஞ்சம் கொடுத்தது உண்மைதான் என்ற அறிக்கை வெளியானது. 

இதனிடையே தற்போது சசிகலா சுடிதார் அணிந்து கொடு நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சசிகலா சுடிதார் அணிந்து கொண்டு இதுபோன்ற பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே வெளியாகி வைரலாயின. 

இதுகுறித்து சிறைச்சாலை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியபோது, "ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே சிறையின் உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஊழல் மற்றும் கிரிமினல் வழக்கு, 1 அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை ஆகிய தண்டனைகளை பெறுபவர்கள் தங்களுக்கு இஷ்டம் போன்ற உடைகளை அணிந்துகொள்ளலாம். சசிகலா வருமான வரி கட்டும் நபர் என்பதால், சிறைச்சாலையில் விருப்பத்திற்கேற்ப உடை அணிந்து கொள்ளும் உரிமையையும் பெற்றுள்ளார்" என்று கூறியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.