சரத்குமார்
மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார் சரத்குமார்! பாஜக கூட்டணிக்கு ஆதரவு!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் அதிமுக கூட்டணிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அவர்கள் கட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தார் சரத்குமார்.
வேட்புமனுத் தாக்கலை நிறைவடைய உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை கூட சரத்குமார் தற்போது வரை வெளியிடாமல். இந்த நிலையில் திடீர் திருப்பமாக சரத்குமாரை அவரது வீட்டிற்கே சென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவு என்ற சரத்குமார் தெரிவித்துள்ளார். விரைவில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்ய உள்ளாராம்.
தனித்துப் போட்டி என்று கூறி வந்த சரத்குமார் அதிமுக கூட்டணியில் ஐக்கியம் ஆனதற்கு மிகப்பெரிய பேரமே காரணம் என்று பேசப்பட்டு வருகிறது.