தாலி கட்டிய பிறகு அல்யா மனசா செய்த தவறு! அவருக்கு நடு ரோட்டில் வழங்கப்பட்ட தண்டனை..! வைரல் வீடியோ உள்ளே!

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான நடிகர் சஞ்சீவ், தன்னுடைய மனைவி ஆலியா ஏதேனும் தவறு செய்தால் அவரை இப்படித்தான் நூதனமாக தண்டிப்பேன் என்று சமூகவலைதளத்தில் வீடியோ பதிவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியலில் கணவன் மனைவியாக நடித்தவர் ஆலியா மானசா- சஞ்சீவ் தம்பதியினர். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இருவரும் காதல் வசப்பட்டனர். இவர்களது திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினர் தற்போது நிஜ வாழ்க்கையிலும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இந்த தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அந்த வகையில் நடிகர் சஞ்சீவ் அவரது மனைவி ஆலியா மானசா ஆகியோரும் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த நேரத்தில் நடிகர் சஞ்சீவ் தன்னுடைய த்ரோபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் சஞ்சீவ் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. அதாவது அந்த வீடியோ பதிவில் நடிகை ஆலியா மானசா நடுரோட்டில் நின்று கொண்டு ஐ லவ் யு சஞ்சீவ் என்று கத்துகிறார். இதனை மறு பக்கத்தில் நின்றுகொண்டு நடிகர் சஞ்ஜீவ் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்கிறார். நடிகை ஆலியா ஏதேனும் தவறு செய்தால் இப்படித்தான் நான் அவருக்கு நூதனமான தண்டனை வழங்குவேன் என்று நடிகர் சஞ்சீவ் அந்த பதிவில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.