முன்னாள் மனைவி முன்னிலையில் இன்னாள் மனைவியுடன் சாண்டி போட்ட ஆட்டம்! வைரல் வீடியோ..! எங்கு தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி கோலாகலமாக முடிவடைந்தது.


இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர் . அதில் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த சீசன் 3 நிகழ்ச்சியானது போரடிக்காமல் சென்றதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் சாண்டி மாஸ்டர் தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஏனெனில் அவருடைய குழந்தைத்தனமான பேச்சாலும் குறும்பு நடவடிக்கைகளாலும் ரசிகர்களை தன்வசப்படுத்தினார். இதனுடைய விளைவு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது பரிசை வெல்வதற்கு மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். 

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது ரசிகர்களையும் சக போட்டியாளர்களையும் சந்தித்து வருகின்றனர் . அந்தவகையில் சாண்டி மாஸ்டர் தன் மனைவியுடன் இணைந்து விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்றிருந்தார். விழாவில் பங்கேற்றனர் தன் மனைவியுடன் இணைந்து மேடையில் ரொமான்ஸ் நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்து சாண்டியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பங்கேற்றார். அவர் முன்னிலையில் இன்னாள் மனைவியுடன் சாண்டி ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.