பிரமாண்டமாக நடந்து முடிந்த பிக்பாஸ் பைனல்! சாண்டி மாஸ்டருக்கு கிடைத்தது 2வது இடம் தான்! அதிர்ந்த ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை யார் வென்றுள்ளார் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் முகேன், லாஸ்லியா , ஷெரின் , சாண்டி ஆகியோர் பங்கு பெற்று வந்தனர் . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை சாண்டி கைப்பற்றியதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க முதலே சக போட்டியாளர்களை கலாய்த்து , பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் சாண்டி ஆவார். பிக்பாஸ் அவர்களையும் குருநாதா எனக்கூறி வந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார் . பிக்பாஸ் இறுதிப்போட்டியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட சாண்டி , பிக்பாஸ் போட்டியின் பைனலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சாண்டி  ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.