5 நிமிடத்துக்கு ரூ.35 லட்சம்! ரேட்டை உயர்த்திய சமந்தா! தலை சுற்றிப்போன தயாரிப்பாளர்!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் நடிகை சமந்தாவும் ஒருவர். இவர் இந்த இரு மொழிகளிலும் புகழ்பெற்று விளங்கும் நடிகை ஆவார்.


நடிகை சமந்தா கடந்த 2017 -ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன பின்பும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.  தற்போது "மனமடு - 2" என்ற திரைப்படத்தில் நடிப்பதர்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  இந்த திரைப்படத்தில் அக்கினேனி நாகர்ஜுனா மற்றும் நடிகை ரகுல் ப்ரீத்  சிங்க் ஆகியோர் நடிக்க உள்ளனர்.   

இந்த திரைப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா 5 நிமிடங்கள் நடிக்க போகிறார். இவர் நடிக்க போகும் வெறும் 5 நிமிட காட்சிக்கு சம்பளமாக ரூ. 35 லட்சம் இப்படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டு உள்ளர்  நடிகை சமந்தா.  சமந்தா தன்னுடைய திருமணத்திற்கு முன்பு தெலுங்கு உலகின் பிரபல நடிகரான நாகர்ஜுனாவுடன் இணைந்து மனம், ராஜு காரு காரி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தற்போது மீண்டும் மாமனாரும் மருமகளும் இணைந்து ஒரே திரைப்படத்தில் அதாவது மனமடு -2 -வில்  நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனமடு -2  திரைப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். சைத்தான் ப்ரத்வாஜ் இப்படத்திற்கான இசையை அமைக்கிறார்.  

இந்த படத்தில் நடிகையின் சம்பளத்தை பற்றி தெரிந்த அவருடைய ரசிகர்கள் பலரும், " என்னதான் இருந்தாலும் 5 நிமிஷத்திற்கு 35 லட்சம் ரூபாயா?" என்று ஆச்சர்யத்தில் அசந்து போய் உள்ளனர். முதலில் சமந்தா சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளருக்கும் தலை சுற்றியுள்ளது. பிறகு தான் அந்த காட்சிக்கு அவர் அவசியம் என்பதால் வேறு வழியில்லாமல் கொடுக்க முன்வந்துள்ளாராம்.