சேலத்து மைக்கேல் ஜாக்சன்! பிரச்சாரத்தில் புதிய ஸ்டைலில் அசத்திய எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் புதிய ஸ்டைலை மேற்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.


கடந்த வாரம் சேலத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். ஜெயலலிதா கலைஞர் பாணியில் வேன் மீது ஏறி நின்று பொதுமக்கள் மத்தியில் மைக் பிடித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இது வழக்கமாக அனைத்து வகையான தலைவர்களும் மேற்கொள்ளும் பிரச்சார முறை.

இந்த நிலையில் இன்று வடசென்னை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக வேனில் இருந்து மேலே வந்த எடப்பாடி பழனிசாமி பார்த்து தொண்டர்கள் வழக்கத்தைவிட அதிகமாக ஆர்ப்பரித்தனர்.

அதற்கு காரணம் அவர் வைத்திருந்த மைக். வழக்கமாக கைகளில் பிடிக்கும் வகையிலான பைக்கை பயன்படுத்தி தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வயர் இல்லாத புதிய வகை தன்னுடைய தலையில் அணிந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். கையில் மைக் இல்லாத நிலையில் தொண்டர்களையும் பொதுமக்களையும் பார்க்க இயல்பாக உரையாடும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் இருந்தது. மேடைகளில் பாடி ஆடும் போது பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் ஒருவகையான மைக்கை பயன்படுத்துவார்.

அதேபோன்றதொரு பைக்கை பயன்படுத்திதான் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால்தான் எடப்பாடி பழனிசாமி சேலத்து மைக்கேல் ஜாக்சன் என்று சமூகவலைதளங்களில் குறிப்பிட்டு மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.