முதல் நாளிலே சைதை துரைசாமி ராஜினாமா..?

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 3 கார் வரையிலும் சென்று வழியனுப்பிய சைதை துரைசாமி அப்போது கிடைத்த இடைவெளியில் ஜெயலலிதாவிடம் சீரியஸாக பேசினார். அவர் பேசியதை முழுமையாக கேட்டுவிட்டு புன்னகையுடன் கிளம்பினார் ஜெயலலிதா.


சென்னையின் முதல் அண்ணா தி.மு.க. மேயராக வெற்றி பெற்றிருக்கும் சைதை துரைசாமியின் பதவியேற்பு விழாவிற்கு வந்து சிறப்பித்தார் அன்றைய முதல்வர் சைதை துரைசாமி. சைதை துரைசாமிக்கு எதிராக செயல்பட்டு வந்த சொந்தக் கட்சி நிர்வாகிகள், அந்தக் காட்சியைக் கண்டதும் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனார்கள்.  
பதவியேற்பு விழா முடிந்ததும் ஜெயலலிதா புறப்பட்டுச் சென்றார்.
அப்படி என்ன பேசினீர்கள் என்று சைதை துரைசாமியை சூழ்ந்துகொண்டு கேட்ட பத்திரிகையாளர்களிடம், ‘பொதுவான சில அரசியல் விஷயங்கள் குறித்தும் என் குடும்பம் குறித்தும் பேசினோம்’ என்பதோடு முடித்துக்கொண்டார்.
நெருக்கமானவர்களிடம் மட்டும் அன்று ஜெயலலிதாவிடம் பேசியதை பகிர்ந்துகொண்டார். ஜெயலலிதாவிடம், ’’அம்மா இந்த மேயர் பதவியில் உங்களுக்குப் புகழ் சேர்க்கும் வகையிலும் மக்களுக்கு சிறந்த சேவை புரியும் வகையிலும் பணிபுரிவேன். என்னை தேர்வு செய்தது குறித்து நீங்கள் வருத்தப்படும் வகையில், எப்போதும் நடக்க மாட்டேன்.
ஆனால், இங்கே நடந்த சில குளறுபடிகளை நீங்களே பார்த்திருப்பீர்கள். என்னைப் பற்றி சிலர் உங்களிடம் நிச்சயம் அவதூறு சொல்வார்கள். அப்படிப்பட்ட சூழலில் எத்தகைய குற்றச்சாட்டு என்றாலும் என்னிடம் விசாரித்து, அதன் பிறகு நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும். என் மீதான அவதூறுகளை விசாரிக்காமல் அதை நம்புகிறீர்கள் என்று தெரியவந்தால், நான் அடுத்த வினாடியே ராஜினாமா செய்துவிடுவேன் என்று சொன்னேன், அதற்கு அம்மா, ’அப்படியொரு நிலைமை உங்களுக்கு மட்டும் நிச்சயம் வராது. ஐந்து ஆண்டுகள் சிறப்பாக பணி புரிய வாழ்த்துக்கள்’ என்று அழுத்திச் சொன்னார்கள்…’’ என்று கூறினார்.
அது, அப்படியே நடக்கவும் செய்தது. முதல் நாளிலேயே சைதை துரைசாமி மேற்கொண்ட அதிரடி…
- நாளை பார்க்கலாம்