ரூ.550 கோடி வசூல்! பாகுபலி நாயகன் பிரபாஸின் சாஹோ படைக்க உள்ள பிரமாண்ட சாதனைகள்!

இயக்குனர் சுஜித் எழுதி இயக்கும் புதிய அதிரடி த்ரில்லர் திரைப்படம் சாஹோ. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் ஷரதா கபூர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.


இந்த திரைப்படமானது ஒரே நேரத்தில் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் என நான்கு மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் மற்றும் டி சீரிஸ்  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம்  ஐமேக்ஸ் கேமராக்கள் ஆல் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படும் என திரைப்பட குழுவினரால் கூறப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் செய்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த சாஹோ திரைப்படமானது ஒவ்வொரு மொழியிலும் எவ்வளவு வியாபாரத்தை ஈட்டும் என கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதனுடைய புள்ளிவிவரங்களை காண்போம் . முதலில் தெலுங்கு திரை உலகில் புள்ளிவிவரங்களை பார்க்கும்பொழுது சாகும் திரைப்படம் 120 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதைப்போல் கன்னடத் திரையுலகில் சாஹோ திரைப்படம் 28 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் இந்த திரையுலகத்தில் தெலுங்கு திரைப்படமான  பாகுபலி திரைப்படம் இதை விட பெரிய அளவில் வியாபாரம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் தமிழ்சினிமாவில் சாஹோ திரைப்படம் 20 கோடியை வியாபாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தோராயமான மதிப்பீடாகும் இதுவரை தெலுங்கு திரைப்பட வரலாற்றில் பாகுபலி திரைப்படம் மட்டுமே இரண்டு இலக்க வியாபாரத்தை ஈட்டிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் போல் மலையாளத்தில் 5.5 கோடியும் ஹிந்தி திரையுலகில் 72 கோடியையும் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக , பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்த சாஹோ அனைத்து மொழிகளையும் சேர்த்து 550கோடிக்கும்  அதிகமாக வசூல் செய்ய  வேண்டும் என கருத்து கணிப்பு கூறுகிறது.