திருமாவளவனை மேடையில் வைத்துக் கொண்டே தலித்துகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று இந்திய லங்காடி அணித்தலைவர் தேவசித்தன் பேசிய போது அரங்கமே அதிர்ந்தது.
நான் தலித் அல்ல இந்தியன்! கல்லூரி விழாவில் திருமாவளவனுக்கு சவுக்கடி கொடுத்த இளைஞர்!
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில், சிறந்த சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு
அழைப்பாளர்களாக SRM பல்கலைக் கழக நிறுவனர், பச்சைமுத்து, முன்னாள் IAS
அதிகாரி ஃபெரோஸ் காந்தி, மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில், 'கோ -கோ' விளையாட்டிற்கு மாற்று வடிவம் கொடுத்த இந்தியர் என்ற முறையில், இளைஞர் தேவசித்தம் என்பவருக்கு விருது அறிவிக்கப்பட்டது. அவரை விழாவில் அடையாளப்படுத்தும் போது, தலித் இளைஞர் என்று அழைத்தனர்.
அப்போது வேகமாக மைக் முன்பு சென்ற தேவசித்தம், , 'நான் விவசாயி முதலில்! பிறகு நான் இந்தியன்!' என்றார். அவர் அப்படிச் சொல்லும் போது, கல்லூரி அரங்கமே அதிர்ந்தது!
ஒவ்வொருவரும் தலித் என்ற அடையாளத்தை தூக்கி எறிந்து விட்டு, இந்தியன் ஆக இணைந்தால், நிச்சயம் வாழ்க்கையில் சாதிக்கலாம். சாதியை வைத்து அரசியல் செய்பவர்களையும் ஒதுக்கலாம் என்று அவர் சொல்ல, கல்லூரி மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
இதனை சற்றும்
எதிர்பாராத திருமாவளவனின் முகம் மாறியது. மேலும் திருமாவளவனிடம் விருதைப் பெறாமல் தேவசித்தம்
தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.