CSK பவுலர்களை கதற விட்ட மனிஷ் பாண்டே! மீண்டும் கலக்குவாரா தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்துள்ளது.


சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்பு களமிறங்கிய மனிஷ் பாண்டே , டேவிட் வார்னர் வுடன் இனைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இவர்கள் இருவருக்கும் எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் சென்னை அணியினர் திணறினர். சிறப்பாக ஆடிய வார்னர் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்பு களமிறங்கிய விஜய் ஷங்கர் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது.சென்னை அணியின் சார்பாக ஹர்பஜன் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

சென்னை அணியை பொறுத்தவரை வாட்சன் , ரெய்னா , ராயுடு , ஜாதவ் ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவதே இல்லை. தோனி மற்றும் டு பிளெஸ்ஸிஸ் மட்டுமே பேட்டிங்கில் ஜொலித்து வருகின்றனர். புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மத், ரஷீத் கான் போன்ற சிறப்பான பந்துவீச்சாளர்களை சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள்  சமாளிப்பார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் .