கல்லு மாதிரி இருந்த சன் ரைசர்ஸ் கோச்! கண் கலங்கி அழுத பரிதாபம்! கரணம் இது தான் !

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான பிலே ஆஃப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வி தழுவி IPL தொடரிலிருந்து வெளியேறியது.


இதனால் மனமுடைந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கோச் டாம் மூடி அழுது கண் கலங்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2 வருடங்களுக்கு முன்னாள் சன் ரைசர்ஸ் அணி ipl கோப்பையை கைப்பற்றியது. அதே போல இந்த வருடமும் கோப்பையை கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அணி கோச் டாம் மூடி தோல்வியை தாங்கிக்கொள்ளமுடியாமல் கண் கலங்கி விட்டார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பரிஸ்டோவ் லீக் போட்டிகள் முடியும் முன்னரே உலககோப்பை தொடருக்கான பயிற்சிக்காக சொந்த ஊர் சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும் இந்த தொடரில் ரன்களை குவித்து சன் ரைசர்ஸ் அணியை பல போட்டிகளில் வெற்றி பெற வைத்தனர். இவர்கள் அணியில் இல்லாதது அந்த அணிக்கு பேட்டிங்கில் பெரிய பலவீனமாக அமைந்தது. 

ஆட்டம் முடிந்தவுடன் தோல்வி பற்றி கருது கூறிய அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன்,   டேவிட் வார்னர் மற்றும் ஜானி பரிஸ்டோவ் இல்லாதது அணியில்  வெற்றிடமாகவே இருந்தது எனவும், மேலும் வெற்றி இலக்காக நாங்கள் நிர்ணயித்த 162 ரன்கள் எட்டக்கூடிய இலக்கே என்றும் அவர் கூறியுள்ளார்.