தென்னாபிரிக்காவை திணறடித்த அஸ்வின், உமேஷ் யாதவ்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .


முன்னதாக இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது . தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி 64 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .

ஒரு கட்டத்தில் 161 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்த தென்ஆப்பிரிக்க அணியை அந்த அணியின் மகாராஜ் மற்றும் பிலண்டர் சரிவில் இருந்து மீட்டனர் . சிறப்பாக ஆடிய மஹராஜ் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . பிளாண்டர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 ரன்களை எடுத்தார்.

இதனால் தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .இதனால் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை விட தனது முதல் இன்னிங்சில் 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது . இதனால் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .