கொரோனாவுக்கு ஜுன் மாதம் என்ட் கார்டு..! மக்களை மகிழ்ச்சி படுத்தும் தகவலை வெளியிட்ட வைரஸ் விஞ்ஞானிகள்!

வருகிற ஜூன் மாதத்திற்குள் நிச்சயமாக இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக தடுப்பூசிகள் வந்துவிடும் என்று ரஷ்ய ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 11,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 2,77,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

ரஷ்ய நாட்டில் இந்த பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் வடகொரியாவை போன்று உண்மை நிலவரத்தை ரஷ்யாவும் மறைப்பதாக பல்வேறு ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த கொடிய நோய்க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பது சோவியத் கால உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆராய்ச்சியகத்தை சேர்ந்த பல்வேறு விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 13 மாதிரியான தடுப்பூசிகளை யாருக்கும் நோக்குடன் ஈடுபட்டுள்ளனர். அவற்றை முதலில் மிருகங்கள் மீதும் பின்னர் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மீதும் செலுத்தி ஆராய்ச்சியை தொடங்கவுள்ளனர்.

முதற்கட்டமாக ஜூன் மாதத்தில் 3 மாதிரி தடுப்பூசிகளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அந்நாட்டில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 253 பேருக்கும் 13 மாதிரியான தடுப்பூசிகளை செலுத்தி சோதிக்க முடிவுசெய்துள்ளனர். அதன் பிறகு, வெக்டர் ஸ்டேட் ரிசர்ச் சென்டர் ஆஃப் வைராலஜி அண்ட் பயோடெக்னாலஜி ஆய்வகத்திற்கு முடிவுகளை ஆய்வு செய்வதற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வகம் இந்த நோய் மட்டுமின்றி, பிளேக், ஆந்த்ராக்ஸ், எபோலா, ஹெபடைடிஸ் பி, எச்ஐவி மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடிப்பதற்கும் செயல்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.