நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய சீனியர் வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார்.


இந்தியா நியூசிலாந்து அணியுடன் டி20 ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் சர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பில்டிங் செய்யும் போது மைதானத்திற்கு வரவில்லை.

லோகேஷ் ராகுல் தான் அவருக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் போட்டிக்கு போகும் ரோகித் சர்மாவின் காயத்தில் முன்னேற்றம் ஏற்படாததால் அவர் நடக்கவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக மயங்க் அகர்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோர் அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.