சிறந்த பயிற்சியாளர் இவர் தான்! பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரின் பெயரைக் கூறி ஆச்சரியப்படுத்திய ரோகித் சர்மா!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கே சிறந்த கோச் என்று கூறியுள்ளார்.


ரோகித் சர்மா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகிய இருவரும் சில வருடங்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்கள். அப்பொழுது ஒரு சீசனில் ரிக்கி பாண்டிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார். அந்த சீசனின் பாதியிலேயே அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதனால் ரோகித் சர்மா கேப்டனாக மாறினார்.

பின்னர் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இளம் வீரர்களுக்கு தன்னுடைய கிரிக்கெட் அனுபவத்தின் மூலம் சிறந்த ஆலோசனை வழங்கி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து அணியின் முன்னால் ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன் இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மாவிடம் எடுத்த பேட்டியில், யார் சிறந்த பயிற்சியாளர் என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ரோகித் சர்மா ஒரு பயிற்சியாளரின் பெயரை கூறுவது கடினம். ஆனால் ரிக்கி பாண்டிங் என்னைப்பொருத்தவரை மேஜிக் என்று கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் போது ஒரு சீசனில் முதல் பாதியில் அணியை வழிநடத்தி கேப்டனாக செயல்பட்டு பின்பாதியில் என்னை கேப்டன் ஆக்கி விட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் பயிற்சியாளராக இருந்தபோது அவரிடம் இருந்து நாம் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். இவ்வாறு தனக்கு பிடித்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.