கம்மின்ஸ் வீசிய பவுன்சர்! தலை அதிர்வு காரணமாக போட்டியில் இருந்து விலகிய ரிஷப் பண்ட்! அவருக்கு பதில் களம் இறங்க போவது யார் தெரியுமா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தலையில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக நாளை நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து ரிஷப் பண்ட் இன் பேட்டில் பட்டு பின்னர் ஹெல்மெட்டில் பட்டது. இதனால் தலையில் அதிர்வு ஏற்பட்டு அதன் காரணமாக அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக கடந்த போட்டியில் பணியாற்றினார். 

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. கடைசி போட்டியில் ஏற்பட்ட தலையில் அதிர்வு காரணமாக ரிஷப் பண்ட் நாளை நடைபெற உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த போட்டியில் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் கீப்பிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆகையால் அவருக்கு பதிலாக வேறு ஒரு பேட்ஸ்மேன் அணியில் இடம் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிஷ் பாண்டே அல்லது கேதர் ஜாதவ் அவருக்கு பதிலாக களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.