மரண அடிணா இது தான்! மும்பை இந்தியன்ஸை புரட்டி போட்ட ரிஷாப் பாண்ட்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 213 ரன்களை குவித்துள்ளது.


டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் சிறப்பாக விளையாடி 43 ரன்களை எடுத்தார் .

அந்த அணியின் இங்கிராம் 47 ரன்களை எடுத்தார். அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பாண்ட் மும்பை அணியின்  சின்னாபின்னமாக்கினார்.இவர் 27 பந்துகளில் 78 ரன்களை விளாசி மும்பை அணியினரை சோகத்தில் ஆழ்த்தினார். இதில் 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.

இதனால் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 213 ரன்களை குவித்தது.மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் மெக் லகனாகான் 3விக்கெட்க்ளை வீழ்த்தினார். பலமான பேட்டிங் ஆர்டர் கொண்ட மும்பை அணி இந்த கடினமான இலக்கை எட்டுமா என்று  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.