ஆற்றில் மிதந்து சென்ற பிரமாண்ட அடுக்குமாடி கட்டிடம்! கேட்போரை வாய் பிளக்க வைக்கும் சம்பவம்!

ரெஸ்டாரன்ட் ஒன்று நதியில் மிதந்து கொண்டிருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சீனா நாட்டில் யாங்ஸ்ட்டே என்னும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நதியில் பில்டிங் ஒன்று ஆடி கொண்டிருப்பது போன்று சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. 

இயற்கை பேரிடர்கள் நிகழும்போது வீடுகள் மற்றும் பெரிய கட்டிடங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு கட்டிடம் தண்ணீரில் தொடர்ந்து மிதந்து கொண்டிருப்பதை நாம் எங்கும் கண்டிருக்க முடியாது. சில நகரங்கள் மிதக்கும் நகரங்கள் இன்று உலகில் அழைக்கப்படுவதுண்டு.

இந்நிலையில், வீடியோவை ஆய்வு செய்த போது அந்த ரெஸ்டாரண்ட் உள்ளூர் வாசிகளால் "மிதக்கும் ரெஸ்டாரன்ட்" என்றே அழைக்கப்படுகின்றது. இந்த ரெஸ்டாரண்டில் இட மாற்றம் செய்வதற்காக படகுகள் மூலம் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகவில்லை. இதனால் ஒரு ரெஸ்டாரன்டே தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போன்று வீடியோவை காண்போர் கருதுகின்றனர். இந்த வீடியோயானது சமூக வலைதளங்களில் வைரலாக சிலருக்கு பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.