ஒரே ஒரு இரவு மட்டும்! இளம் பெண் அதிகாரியிடம் வாட்ஸ் ஆப்பில் கெஞ்சிய 52 வயது பிடிஓ! பிறகு நேர்ந்த கதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் இளம்பெண் ஒருவருக்கு காதல் குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.


இதனடிப்படையில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இச்சம்பவம் அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட வட்டார வளர்ச்சி துணை அலுவலர் முருகேசன் 52.

இவர் அந்த அலுவலகத்தில் சேர்ந்த சில நாட்களே ஆன நிலையில் அங்கு வேலை பார்க்கும் இளநிலை உதவியாளரின் மொபைல் எண்ணிற்கு காதல் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். அப்பெண் சில நாட்கள் இதை பொருட்படுத்தாமல் விட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த அதிகாரி அடிக்கடி அவருக்கு போன் செய்து தொந்தரவு செய்வதும் மற்றும் வாட்ஸ் அப்பில் தன்னை காதலிக்குமாறும், தன்னுடன் தனியாக வருமாறும் ஒரே ஒரு இரவு அனுசரிக்குமாறும் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி அப்பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிகிறது.

இவ்வாறு பல நாட்கள் நடந்ததால் அவரது தொல்லை தாங்காமல் அதிகாரியின் நடத்தை குறித்து மேலதிகாரிகளுக்கு அப்பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை மேலதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் ஆத்திரமடைந்த அப்பெண் மாவட்ட கலெக்டர் பிரபாகரனுக்கு மனுவை அனுப்பியுள்ளார்.

அப்போது அவரது நடத்தை குறித்து விசாரிக்க குழு ஒன்று வந்தது இந்நிலையில் குமரேசன் அப்பனிடம் தவறுதலாக வாட்ஸப்பில் பேசிய தகவல்களை அப்பெண் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட பிறகு வட்டார வளர்ச்சி துறை அதிகாரி குமரேசன் மாவட்ட ஆட்சியரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.