48 மெகா பிக்சல் கேமராவுடன் ரெட்மி நோட் 7! விலை என்ன தெரியுமா?

ஜியோமியின் ஒரு பிராண்டான redmi note 7 அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன


   சீனாவில் முன்னணி செல்போன் நிறுவனமாக இருப்பது ஜியோமி இதன் பிராண்ட் தான் ரெட்மி. ரெட்மி செல்போன்களுக்கு இந்தியாவில் எப்போதும் மவுசு உண்டு. தற்போது ரெட்மியை துணை நிறுவனமாக அறிவித்துள்ள ஜியோமி, அதன் பெயரிலேயே செல்போன்களை வெளியிட முடிவு செய்துள்ளது. இதன் முதல் படியாக வெளிவருவதுதான் note 7 செல்போன். இது சீனாவில் கடந்த வியாழக்கிழமை அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் அனைவரும் வியக்கத்தக்க வகையில் உள்ளது. 

   இது மிக முக்கியமானது என்னவென்றால் நான்காயிரம் மில்லி ஆம்பியர் அவர் பேட்டரியும் 48 மெகாபிக்சல் கேமராவும் தான். பின்பகுதியில் 48 மெகாபிக்சல் திறன் கொண்ட இரண்டு கேமராக்கள் உள்ளன. முன் பகுதியில் 13 மெகா பிக்சல் திறன் கொண்ட கேமரா உள்ளது. கைரேகை மூலம் unlock செய்யும் வசதி பின் பகுதியில் உள்ளது. டிஸ்ப்ளே அளவானது 6.3 அங்குலம். 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்து கொள்ளலாம். random access memory ஆனது 3 ஜிபி தொடங்கி 6 ஜிபி வரை கிடைக்கிறது. சேமிப்பகம் ஆனது 32 ஜிபி தொடங்கி 64 ஜிபி வரை உள்ளது. 

   256 ஜிபி வரை இதை விரிவுபடுத்திக் கொள்ளலாம். முகத்தை அடையாளம் கண்டு செல்போன் unlock செய்யும் வசதி இதில் உண்டு. ஒருமுறை சார்ஜ் செய்தால் 251 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். 13 மணி நேரம் தொடர்ந்து வீடியோக்கள் பார்க்கலாம், ஏழு மணி நேரம் வீடியோ கேம் விளையாடலாம் 23 மணி நேரம் பேசிக்கொண்டே இருக்கலாம், அந்த அளவுக்கு பேட்டரியின் திறன் உள்ளது. 

   186 கிராம் எடை கொண்ட இந்த செல்போன் ஜனவரி 15ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அடர் கருப்பு, பொன் மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும். 

10 ஆயிரத்து 300 ரூபாய் தொடங்கி 14 ஆயிரத்து 500 ரூபாய் வரை திறன்களுக்கு ஏற்றவாறு இந்த செல்போனின் விலை இருக்கும் என்று கூறப்படுகிறது.