பொதுவாக சிறுவர்கள் 11 அல்லது 12 வயது அடைந்தபிறகு, அவர்களுக்கு உபநயனம் என்று சொல்லப்படுகிற பிரம்ம பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பூணூல் போடுவது எதற்காக? அதிலும் குறிப்பாக சிறு வயதில் பூணூல் போடுவது ஏன் தெரியுமா?

தற்போதும் கூட சில சமூகங்களில் இது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேத காலங்களில், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இருபாலருக்குமே இது செய்யப்பட்டது. ஆனால் மெதுவாக, இதிலிருந்து சிறுமிகள் விலக்கப்பட்டனர்.
நான்தான் பிரம்மன் என்பதை இரகசிய மந்திரத்தின் துணையுடன் உணரச் செய்வதே பிரம்மப் பிரதிஷ்டை. ஒரு சிறுவன், 11 அல்லது 12 வயது அடைந்தவுடன், தனக்குள் தெய்வீகத்தை உணர்வதற்காக பிரம்மப் பிரதிஷ்டை தீட்சை வழங்கப்படுகிறது. உண்மையில் ஒருவர் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் முன், இந்தப் புரிதலில் இருந்தே அந்த அனுபவத்துடன்தான், வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.
13 அல்லது 14 வயதில் சிறுவர்கள் ஆண், பெண் உறவு பற்றி மெதுவாக தெரிந்து கொள்ள துவங்குகிறார்கள். அப்போது அவர்களுடைய மனம் பல திசைகளிலும் அலைபாய ஆரம்பிக்கிறது. அதனால் அந்த வயதிற்கு முன்பாகவே, அவர்கள் தாங்கள் யார் என்பதை உணர்ந்து கொண்டு விட்டால், பிறகு வாழ்க்கையின் எந்தப் பரிமாணத்திற்குள் அடியெடுத்து வைத்தாலும், அவர்களுடைய செயல்பாடுகள் சரியான கோணத்தில் இருக்கும். அதிகப் பேராசை அல்லது காமம் இவற்றால் பாதிக்கப்பட்டு செயல் செய்ய மாட்டார்கள்.
ஆண், பெண் என்ற இருமையில் சிக்கிக் கொள்ளாதிருக்கும்போது, தெய்வீகத்தை உணர்வது மிகவும் சுலபம். எனவே, தன்னை உணர்வதற்கான பரிமாணத்தில், 11, 12 வயதிலேயே ஈடுபடுத்தப்படும்போது, மிகவும் குறைந்த எதிர்ப்புணர்வுடன் சுலபமாக அவர்களால் அதில் ஈடுபட முடிகிறது. அதன்பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையை முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்தில் நடத்திச் செல்ல முடியும்,
பூணூல் மூன்று முடிச்சுகள்
கொண்டதாக உள்ளது. அந்த மூன்று முடிச்சுகளை சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளின்
அம்ஸமாகவும், ஒவ்வொரு முடிச்சிலும் மூன்று பிரிகளாகவும், மூன்று முடிச்சுகளிலும் உள்ள
ஒன்பது பிரிகளை நவகிரகங்களாகவும், நாம் நமது உடலியல் அணிந்துக்கொள்ளவதன்மூலம் மும்மூர்த்திகளும்,
நவகிரகங்களும் நம்மை எல்லா நேரங்களிலும் கட்டி காத்துவருவதாக ஐதீகம். இதுவே பூணூல்
அணிந்துகொள்வதன் சிறப்பம்சமாகும்.