ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது ஏன் தெரியுமா?

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டிச் செல்வது வழக்கம்.


சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஐயப்பனுக்குச் செலுத்த வேண்டிய அபிஷேகம் மற்றும் இதர பொருட்களை இரண்டு பகுதிகள் கொண்ட துணிப்பையில் வைத்து இருமுடிகளாகக் கட்டி தலையின் மீது சுமந்து செல்வர் முன் பகுதிகளில் சுவாமிக்கு உரிய பொருட்களையும் பின்பகுதிகளில் தங்களுக்கு வேண்டிய பொருட்களையும் வைத்து எடுத்துச் செல்வர்.

முடி என்றால் கிரீடம் என்ற பெயருண்டு. இருமுடிகளில் முன்முடியில்,இறைவனுக்குரிய பூஜை பொருள்கள், நெய்த்தேங்காய் நிரப்பப்பட்டும், பின் முடியில் பக்தர்களின் பயணத்துக்கு வேண்டிய உணவுப் பொருட்களும் இருக்கும். அதாவது முன்முடி புண்ணியம். பின்முடி பாவச் சுமை. பயணத்தில் மலையை நெருங்க நெருங்க உணவுப்பொருட்கள் உள்ள பின்முடியின் பாரம் குறைந்து கொண்டே வரும். அதன் தத்துவமானது, இறைவனை நெருங்க நெருங்க பாவம் குறைந்து கொண்டே போகும்; இறுதியில் புண்ணியம் மட்டுமே மிஞ்சும் என்பதே ஆகும்.