கோவில்களில் சிவலிங்கத்திற்குப் பின்னால் ஐந்து தலை நாகம் வைத்து அலங்கரிப்பது ஏன் தெரியுமா?

ஐந்து தலை நாகம் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலங்களைக் குறிக்கும்.


இந்த ஐம்புலன்களும் பாம்பு போல விஷப்பூச்சிகளே. மாயை எனும் துன்பத்தைத் தருகின்ற இந்த ஐம்புலன்களையும் அடக்கி, அவற்றை எவனொருவன் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறானோ அவனே ஞானியாவான். ஞானசொரூபன் இறைவன் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த நாகாபரணத்தினை இறைவனுக்கு அலங்காரமாக வைத்து அழகு பார்க்கிறார்கள்.

சிவபெருமான் மட்டுமல்ல, மகாவிஷ்ணு ஐந்து தலை நாகமாக ஆதிசேஷனை படுக்கையாக மாற்றி அதன் மேல் சயனித்திருப்பார்.  கருமாரியம்மன் தலையில் மகுடமாக நாகம் இருக்கிறது. விநாயகப் பெருமானுக்கும் வயிற்றில் கயிறு போல சுற்றி முடி போட்ட நிலையில் நாகத்தினை வடிவமைத்திருப்பார்கள். அனைத்து தெய்வங்களின் திருமேனியையும் இந்த நாகம் அலங்கரித்திருக்கும்.


விஷத்தன்மை கொண்ட ஐந்து புலன்களையும் அடக்கி ஞானத்தினை அடைய வேண்டுமென்றால் அதற்கு தெய்வத்தின் அருள் தேவை என்பதை உணர்த்தவே நாகத்தினை இறைவனோடு தொடர்புபடுத்தி வைத்திருக்கிறார்கள்.