வயதான தயாரிப்பாளருடன் நெருக்கமான காதலி..! சுசாந்த் சிங் தற்கொலைக்கு இது தான் காரணமா? திரையுலகை உலுக்கிய புகைப்படங்கள்!

வயதான தயாரிப்பாளரான மகேஷ் பட்டுடன் மறைந்த நடிகர் சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபர்த்தி மிகவும் நெருக்கமாக இருந்ததே அவரது தற்கொலைக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி திரையுலகை உலுக்கி வருகிறது.


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் நெஞ்சங்களில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

சுஷாந்த்க்கு நிகழ்ந்தது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தங்களுடைய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நடிகர் சுஷாந்த் உடன் வைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியை போலீசார் சுமார் ஒன்பது மணி நேரம் விசாரித்துள்ளனர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நடிகை தானும் சுஷாந்த்தும் ஒன்றாக இருந்து உள்ளனர் என்றும் வரும் நவம்பரில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்ததாகவும் நடிகை ரியா ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் சண்டையிட்டு பிரிந்து விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

இதை தொடர்ந்து போலீசார் நடிகர் சுஷாந்த்க்கு சிகிச்சை அளித்து வந்த மனநல மருத்துவரையும் விசாரித்து இருக்கின்றனர். விசாரணையில் மனநல மருத்துவர் கேசரி சவ்டா, நடிகர் சுஷாந்த் ரியாவை காதலிப்பதற்கு முன்பாக, நடிகை அங்கீதாவை ஆறு வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். இதற்குப் பின்பு சுஷாந்த் ஒரு சில பெண்களை காதலித்துள்ளார். ஆனால் அவர்கள் யாரும் சுஷாந்த்க்கு வொர்க் அவுட் ஆகவில்லை. கடைசியில் சுஷாந்த் ரியாவை காதலிக்க ஆரம்பித்தார்.

ரியாவை காதலித்து ஒன்றாக இருந்த நிலையிலும், தன்னுடைய பழைய காதலியான அங்கீதாவை நினைத்து சுஷாந்த் ஏங்க ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் அங்கீதாவை மாதிரி வேறு யாராலும் தன்னை காதலிக்க இயலவில்லை எனவும் அடிக்கடி கூறியுள்ளதாகவும் மருத்துவர் கூறியிருக்கிறார். மேலும் ரியாவின் ஒரு சில நடவடிக்கைகள் அவருக்கு பிடிக்காததால் அவர் ரியாவுடன் சந்தோஷமாக இல்லை எனவும் சுஷாந்த்க்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர் விசாரணையில் கூறியிருந்தார்.

நடிகர் பிரசாந்தின் மனநலமருத்துவர் இவ்வாறு கூறியிருந்த நிலையில், நடிகை ரியா உன் பாலிவுட் திரையுலகில் மூத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான மகேஷ் பட்டுடன் நடிகை ரியா சக்ரபோர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதனைப் பார்க்கும் பொழுது நடிகை ரியா உன் மகேஷ் மட்டும் நெருக்கமாக இருந்ததை பற்றி அறிந்ததால் தான் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டாரா? என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்களும் வெளியாகி பாலிவுட் திரையுலகையே உலுக்கி வருகிறது. தற்போது நடிகை ரியா மற்றும் மஹேஷ் பட் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.