உண்மையிலே காஷ்மீர் யாருக்கு சொந்தம்? என்ன செய்ய வேண்டும் இந்திய அரசு?

சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தனித்தன்மையை அனுபவித்துவந்த காஷ்மீர், ஒரே நாளில் அத்தனை சிறப்புகளையும் இழந்து நிற்கிறது. இன்றைய நிலையில், காஷ்மீர் யாருக்குத்தான் சொந்தம், வலிமையான பாரதம் இந்த நிலையில் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.


பல்வேறு தேசங்களாக இருந்த இந்திய நிலப்பரப்பை ஆங்கிலேயர் கைப்பற்றி ஒருங்கிணைந்த இந்தியாவாக உருவாக்கிய போதும் காஷ்மீர் மன்னர் ஆளும் தனி நாடாகவே இருந்தது. அது ஒரு போதும் இந்தியாவின் கீழ் இருந்ததில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்ததும் இந்திய நிலப்பரப்பில் அடங்கி இருந்த சமஸ்தனங்கள் இந்தியாவோடும், பாக்கிஸ்தான் நிலப்பரப்பில் அமைந்த சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடும் இணைந்தன. புவியியல் ரீதியாக இரண்டில் இருந்தும் ஒதுங்கி இருந்த காஷ்மீர் தனி நாடாகவே இருந்து விட்டது.

மக்கள் தொகையில் பெரும்பாலானோர் முஸ்லீம்களாகவும் மன்னர் இந்துவாகவும் இருந்தும்கூட எந்தப் பிணக்கும் அங்கு இல்லை. மக்கள் முஸ்லீம்கள் என்பதால், தாங்கள் படையெடுத்துச் சென்றால் நம்மை ஆதரிப்பார்கள் என்று தப்புக் கணக்கு போட்டு பாகிஸ்தான் உள்ளே நுழைந்தது. அப்போது நாட்டைக் காக்க மன்னர் ராம்சிங் இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார்.

பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை பாக்கிஸ்தான் எடுத்துக் கொள்ள இந்தியப் படைகள் நுழைந்த பிறகு மிஞ்சிய பகுதிகளை இந்தியா இணைத்துக் கொள்ள அன்று பிடித்தது அந்த நிலப்பரப்பிற்கும் மக்களுக்கும் ஜென்ம சனி!

காஷ்மீரிகள் என்றாலே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற ஒரு பிம்பம் நம் அத்தனை பேருக்கும் உண்டு! ஆனால் எந்த ஒரு காஷ்மீரியிடமும் தனியாகப் பேசிப் பாருங்கள், அவர்கள் பாகிஸ்தானை துளியும் விரும்புவதில்லை என்பதுதான் உண்மை.

ஆம், காஷ்மீரியர்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்தியரும் அல்ல! பாகிஸ்தானியரும் அல்ல! காஷ்மீரிகள்!. அதனால்தான் காஷ்மீரை இந்தியாவோடு வலுக்கட்டாயமாக இணைத்த போது நேரு அந்த நாட்டிற்கென்று சில உரிமைகளை அரசியல் சாசனப் பிரிவிலேயே எழுதிக் குடுத்தார்!

நேரு கொடுத்த நம்பிக்கைகள் இன்று நீக்கப்பட்டு இருக்கின்றன! இந்துத்துவ மனநிலையில் இன்று இது கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் அதே நேரு ‘இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாதவரை இந்தி எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கப்பட மாட்டாது’ என்று நமக்கு குடுத்த வாக்குறுதியும் "போடா மயிறு" என்ற மனநிலையில் நம்மைப் பார்த்து நீக்கப்படலாம்!!

அதனால், காஷ்மீரை என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது காஷ்மீர் மக்கள்தான். அங்கே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும்.