2வது கல்யாணத்துக்கு மிகத் தீவிரமாக மாப்பிள்ளை தேடும் பிரபல டிவி நடிகை!

தல்ஜியத் கவர் என்ற பாலிவுட் மற்றும் டிவி சீரியல் நடிகை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், தான் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும், பெற்றோர்கள் மாப்பிள்ளையை தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தல்ஜியத் கவர் ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் பிரபலமாக வலம் வந்த நடிகைகளுள் ஒருவராவார். இவர் குல்வாது (Kulvaddhu), அஞ்சலியின் காதலுக்கு என்ன பெயர் (Anjali in Iss Pyaar Ko Kya Naam Doon?) போன்ற பிரபலமான தொடர்களில் நடித்தவர் ஆவார். மேலும் நம்ம ஊரின் ஜோடி நம்பர் ஒன் போன்று பாலிவுட்டில் உள்ள நச் பாலியே (nach baliye) என்ற தொடரில் இவரும் இவரின் முன்னாள் கணவருமான ஷாலின் பெனாத் முதற்பரிசை தட்டிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கும் ஷாலின் பெனாத் என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு ஜேடன் என்ற மகனும் உள்ளார். சுமுகமாக சென்றுகொண்டிருந்த தாம்பத்திய வாழ்க்கையில் காலம் போகப் போக பல மனக்கசப்புகள் ஏற்பட்டன. ஆகையால் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 2015-ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர். ஜேடனை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு தல்ஜியத்திடம் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், தல்ஜியத்தின் பெற்றோர்கள் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்கு மாப்பிள்ளையை தேடி வருவதாக அவ்வப்போது கூறி வந்தனர். இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் தல்ஜியத்தே ஒப்புக்கொண்டார். மேலும் கூறுகையில் நானும் சில நபர்களை சந்தித்து வருகின்றேன் என்றும் அவர்கள் என்னிடம் மிகவும் நன்றாக பயணித்து வருகின்றனர்.

ஆயினும் என்னுடைய இரண்டாவது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதாகவே இருக்கும். என் நிலையை பார்த்து சில திரையுலக பிரபலங்களும் என்னை மறுமணம் செய்வதற்கு விரும்பினர். ஆனால் நான் மீண்டும் ஒரு திரையுலகப் பிரபலத்தை மனம் முடிக்க விரும்பவில்லை. என் இரண்டாவது கணவர் நல்ல பிஸ்னஸ்மேன் ஆகவோ இல்லை நிலையான தன்மையுடைய வேறு பணியினை செய்பவராகவே இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன் என்றும் கூறினார்.

மேலும் கூறுகையில், என் மகன் ஜேடனுக்கு ஷாலினின் ஞாபகம் சிறிய அளவில் தான் உள்ளது. அவன் தற்போது ஒரு தந்தையை பெறும் மனநிலையில் உள்ளான். நானும் என்னுடைய கணவரை தேர்ந்தெடுக்க ஆயத்தம் ஆகி விட்டேன் என்றும் கூறினார். என் வீடு தற்போது மேட்ரிமோனி சென்டர் போல் ஆகிவிட்டது என்று கிண்டலடித்தார். என் பெற்றோர்கள் நிறைய மாப்பிள்ளைகளின் புகைப்படங்களையும் தகவல்களையும் தினமும் என்னிடம் அளிக்கின்றனர். ஆனால் எனக்கு எந்தவித அவசரமும் இல்லை என்று அவர்களிடம் தெரிவித்துவிட்டதாக கூறினார்.

இறுதியாக இவ்வளவு வருடங்கள் கணவனை பிரிந்து வாழ்ந்த வாழ்க்கை கடினமாக இருந்தது என்றும், இந்த காலத்தில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டதாகவும், தன் வாழ்நாளில் மறக்க முடியாத காலங்களில் இந்த குறிப்பிட்ட காலமும் இடம்பெறும் என்றார். ஆனால் தான் தற்போது உடலளவிலும் மனதளவிலும் வலுவடைந்துள்ளேன். மேலும் பல சீரியல்களிலும் ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆயத்தமாகி வருகிறேன் என்று கூறி பேட்டியை நிறைவு செய்தார்.