ஹோட்டல் பிசினஸ் போர்! 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பழைய தொழில்! கவர்ச்சி நடிகையின் அசத்தல் முடிவு!

சினிமாவில் நடிகைகள் பல வருடங்கள் இடைவெளி விட்டு பின்பு ரீஎன்ட்ரி தருவது என்பது வழக்கமான ஒன்று தான்.


அந்த வரிசையில் 90 களில் நடித்த நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி தருவதற்கு தயாராக உள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த விசித்திரா தான்.  இவர்  தனக்கு என்று ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தவர் என்றே கூறலாம்.

இவர் முத்து, வீரா, தேவர்மகன், ரசிகன் என  வெற்றிப்படங்கள் நடித்துள்ளார்.  இவர் கடைசியாக 2002-ம் ஆண்டு வெளிவந்த  இரவு பாடகன் என்ற படத்தோடு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.  இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர்.  இவர் இவரது கணவரின் ஹோட்டல் நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 

இவர்  சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு எடுத்து உள்ளார்.  ஆனால் முன்பு மாதிரி கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார் இதற்கான போட்டோ ஷூட் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் இவருக்கு வில்லி கதாபாத்திரங்களுக்கு மிகவும் ஏற்புடையவர் என்றே கூறலாம். அதுமட்டும் இல்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் வில்லிகளுக்கு மிக பெரிய வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இவர் இதை பற்றி  யோசித்தால் தமிழ் சினிமாவுக்கு ஒரு தரமான வில்லி கிடைப்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை எனலாம்.