தனிமையில் இருந்த உறவுக்காரப் பெண்..! தெரிந்து கொண்டு சுவர் ஏறிக் குறித்த திருமணமான நபர்..! பிறகு உள்ளே அரங்கேறிய பகீர் சம்பவம்! புதுச்சேரி பரபரப்பு!

வீட்டில் தனியாக இருந்த உறவுக்கார பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கட்டிடத் தொழிலாளிக்கு தரும அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


தமிழகம் புதுச்சேரி மாநிலங்களின் எல்லையில் உள்ளது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பெரிய கோட்டக்குப்பம் காலனி. இங்கு கட்டிடத்தொழிலாளி முருகன் என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் உறவினர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உறவுக் கார பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததை கவனித்துள்ளார். இரவு நேரம் என்பதால் ஊரே நிசப்தமாக இருக்க எப்படியாவது அந்த பெண்ணை அடைய வேண்டும் என கொடூர உணர்ச்சி தோன்றி உள்ளது.

பின்னர் அந்த வீட்டின் தோட்டம் வழியாக உள்ளே சென்ற முருகன் மின்விளக்கை அணைத்துவிட்டு அந்த பெண் மீது பாய்ந்துள்ளார். அந்த பெண் எவ்வளவோ தப்பிக்க முயற்சித்தும் முருகனின் கிடுக்கிப்பிடியால் தப்பிக்க இயலவில்லை. இதையடுத்து அந்த பெண் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துவிட்டனர். அதற்கு அப்புறம் என்ன வழக்கம்போல் முருகனுக்கு தரும அடி கொடுக்கப்பட்டது.

பின்னர் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அருகில் உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில்தான் பெண்களை தனியாக விட்டு விட்டு பெற்றோர் வெளியில் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் இதுபோன்ற காமக் கொடூர எண்ணம் உள்ள உறவினர்களால் மற்றவர்கள் மீதான நம்பிக்கையும் மக்களுக்கு குறைகிறது.