தமிழகத்தில் இன்று ரம்ஜான் இல்லை..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஏன் தெரியுமா?

தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.


புனித ரமலான் மாதம் தொடங்கி இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்த காலங்களில் அதிகாலைத் தொழுகையில் தொடங்கி மாலை தொழுகை வரை உண்ணா நோன்பு இருந்து இறைவனை நினைத்திருப்பார்கள். நோன்பு என்பது வெறும் உணவை மட்டும் உட்கொள்ளாமல் இருப்பது மட்டும் அல்ல. தண்ணீர் குடிக்காமல், வேறு எந்த தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பதாகும்.

ரம்ஜான் மாதத்தில் அமாவாசையை தொடர்ந்து வரும் மூன்றாம் பிறை வரக்கூடிய நாள் புனித ரமலான் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிறை தெரிவதை வைத்து ரமலான் பண்டிகை  வழக்கமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் வருகிற திங்கள் கிழமை தான் ரமலான் பண்டிகை என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிறை தெரியாததால் திங்கட்கிழமை தான் ரமலான் என்று தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகையானது வருகிற திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.