ரங்கராஜ் பாண்டேக்கு வேலை கிடைச்சாச்சு.. எங்கேன்னு தெரியுமா?

தந்தி தொலைக்காட்சியிலிருந்து வெளியேறிய ரங்கராஜ் பாண்டே, எங்கு வேலைக்குப் போகிறார் என்பது ரகசியமாக இருந்தது, இப்போது அதற்கு விடை கிடைத்துவிட்டது.


ரங்கராஜ் பாண்டே தினகரனுக்கு ஆதரவாளர் என்றும் பா.ஜ.க. ஆதரவாளர் என்றும் முத்திரை குத்தப்பட்டவர் அவரது நிகழ்ச்சிகளில் இதன் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காண முடியும். சமீபத்தில் ஒளிபரப்பான ஜெயலலிதா நிகழ்ச்சியில், சசிகலாவும் அவரது குடும்பத்தாரும் ஜெயலலிதாவை மிகவும் அன்பாகவும், பாசத்துடனும் காட்டினார் என்பதை மையப்படுத்தியே வெளியானது. இந்த நிகழ்ச்சிதான் பாண்டேயின் வேலைக்கு உலை வைத்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால், ரங்கராஜ் பாண்டே, தானே விரும்பி வெளியேறியதாக சொல்லிவந்தார். அதனால் பா.ஜ.க.வில் சேரப்போகிறார் என்றும், பா.ஜ.க., பாண்டேவுக்காக சேனல் ஆரம்பிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் செய்தி வெளியானது. ஆனால், இப்போது அவர் எங்கே சேரப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. பா.ஜ.க.வில் நேரடியாக சேரவில்லை என்றாலும், பா.ஜ.க. ஆதரவு சேனல் ஒன்றுக்குத்தான் தலைமைப் பொறுப்பேற்க இருக்கிறார்.

கேரளத்தில் புகழ்பெற்ற ஆசியாநெட் சேனலுக்கு ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடா போன்ற மொழிகளில் சேனல் இயங்கிவருகிறது. நீண்ட நாட்களாகவே தமிழில் கால் பதிக்க தகுந்த நேரம் பார்த்துவருகிறது. இதற்காக தமிழின் முன்னணி செய்தி சேனல்களான நியூஸ் 7, காவேரி போன்றவை விலை பேசப்பட்டது. ஆனால், இதுவரை எதுவும் பேரம் படியவில்லை.

இந்த சூழலில் பாண்டே தந்தியில் இருந்து வெளியேறியதும், அவரை வைத்து தமிழில் புதிய சேனல் தொடங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்தது. கடைசியாக கிடைத்த தகவல்படி, ஆசியா நெட் குழுமத்தின் தமிழ் சேனலுக்கு தலைமை ஏற்க பாண்டே ஒப்புக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்த்லுக்குள் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்று பாண்டேவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

அதனால், அடுத்த மாதமே ஆள் பிடிக்கும் வேலையில் ரங்கராஜ் பாண்டேவும், ஆசியா நெட் சேனலும் தீவிரமாக களம் இறங்குகின்றன என்பது உறுதியாகியுள்ளது. ஆசியா நெட் சேனல் கிட்டத்தட்ட பா.ஜ.க. ஆதரவு சேனல் என்பதால், ரங்கராஜ் பாண்டே, அதில் தொடர்ந்து பணியாற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று தெரியவந்துள்ளது.

தந்தி தொலைக்காட்சியிலிருந்து வெளியேறிய ரங்கராஜ் பாண்டே, எங்கு வேலைக்குப் போகிறார் என்பது ரகசியமாக இருந்தது, இப்போது அதற்கு விடை கிடைத்துவிட்டது.