15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவருடன்..! ஒரு வழியாக சம்மதித்த ரம்யா கிருஷ்ணன்!

நடிகை ரம்யா கிருஷ்ணன் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் கணவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.


தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம், இந்தி மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை ரம்யாகிருஷ்ணன் . இவர் 1983ஆம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். படையப்பா மற்றும் பாகுபலி போன்ற திரைப்படங்களில் தனது துணிச்சலான நடிப்பின் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்ப்பை பெற்றார் நடிகை ரம்யா கிருஷ்ணன் .

கடந்த 2003ம் ஆண்டு இயக்குனர் வம்சியை திருமணம் செய்து கொண்ட நடிகை ரம்யாகிருஷ்ணன் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே தனது கணவர் இயக்கத்தில் சந்திரலேகா , ஸ்ரீ ஆஞ்சநேயம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இன்னிலையில் பதினைந்து வருடத்துக்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் மீண்டும் தனது கணவர் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். வந்தே மாதரம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .