ஒரே நாடு மற்றும் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே தரம்.. ஒரே ரேஷன் கார்டு ..!மத்திய அரசு திட்டவட்டம்..!

பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மக்களவையில் இந்திய நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு மக்களுக்கு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக கூறினார்.
இதன்படி ரேஷன் கார்டை வைத்திருக்கும் பயனாளிகள், இந்திய நாட்டிலுள்ள எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம். இதன் மூலம் ஓர் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயரும் மக்கள் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திட்டத்தை இந்திய மக்கள் வைத்திருக்கும் ஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள பயோமெட்ரிக்கை நியாயவிலைக்கடை இயந்திரத்துடன் இணைத்து வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்று அமைச்சர் கூறினார். இதற்கு முதலில் நியாய விலை கடை இயந்திரங்கள் மின்மயமாக்கப்பட்ட வேண்டுமென்றும் அவர் கூறினார்.
இயந்திரங்கள் அனைத்தும் மின்மயமாக்கப்பட்ட பின்பு வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் படுத்தப்படும் என்று அமைச்சர் ராம்விலாஸ் கூறினார்.
இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தரம் என்னும் கொள்கையை பரப்ப இயலும் என்றும் அமைச்சர் ராம்விலாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.