சீனியர் நடிகையுடன் இளம் நடிகை லிப்லாக்! சின்மயி கணவரின் விபரீத காட்சி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரகுல் பிரீத் சிங் தன்னை விட மூத்த நடிகைக்கு உதட்டில் முத்தம் கொடுத்திருக்கும் சம்பவமானது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கு திரையுலகில் நேற்று மன்மதுடு-2 என்னும் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நாகார்ஜூனா கதாநாயகனாகவும், ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாகவும் நடித்தனர். 59 வயதான நாகார்ஜுனா இந்த படத்தில் பிளேபாய் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சர்ச்சையால் புகழ்பெற்ற பாடகி சின்மயின் கணவர் ராகுல் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் தன்னைவிட மூத்த நடிகையான ஜான்சிக்கு லிப்லாக் முத்தம் கொடுப்பது போன்ற காட்சியுள்ளது. இந்த காட்சியை கண்ட ரசிகர்கள் சின்மயி வெளுத்து வாங்குகின்றனர். இதே வேறு ஒருவரின் திரைப்படத்தில் இவ்வாறு நடந்திருந்தால் சின்மயி நிச்சயம் எதிராக குரல் கொடுத்திருப்பார். ஆனால் தன் கணவன் இயக்கிய திரைப்படத்திலேயே இவ்வாறு உள்ளதால் அவரால் எதுவும் வாய் திறக்க முடியவில்லை என்று விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

மேலும் ரகுல் பிரீத் சிங் திரைப்படத்தின் காட்சி ஒன்று புகைபிடிப்பது போன்று அமைந்துள்ளது. இந்த காட்சியில் படத்தைக் கண்ட அனைவரும் ரகுல் பிரீத் சிங்கை விளாசியுள்ளனர். மேலும் நாகார்ஜுனா ப்ளேபாயாக நடித்திருப்பதற்கும் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்த படம் நினைத்த அளவிற்கு சோபிக்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளுக்கு சின்மயி என்ன பதில் தரப்போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விளாசுகின்றனர்.