வெறித்தனம் ஓவர் லோடடு..! தெறிக்கவிடும் தலைவரின் தர்பார் 2nd லுக்!

தர்பார் படத்தின் 2-வது போஸ்டரானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு "தர்பார்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் போஸ்டரை ஏ.ஆர். முருகதாஸ் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதியன்று வெளியிட்டார். இந்த படமானது லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், ஜீவா, மனோபாலா, ஆனந்த்ராஜ், பிரகாஷ்ராஜ், யோகிபாபு ஆகிய முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் தன்னுடைய முதல் படத்தில் நடிக்கவிருக்கிறார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங்கும் இந்த படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தின் 2-வது போஸ்டர் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அவர் உடற்பயிற்சி செய்வது போன்ற ஸ்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை ரசிகர்கள் பெருமளவில் ரசித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.