ரூ.170..! தொலைந்த ரயில் டிக்கெட்! உதவிய தமிழர்கள்! நான் சென்னை வந்த கதை இது தான்..! நெகிழ வைத்த ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.


இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , எப்படி நான் தமிழ்நாட்டுக்கு வந்தேன் என்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நான் பள்ளியில் நன்றாக படித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் நான் பத்தாம் வகுப்பிற்கு செல்லும் போது என்னை ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டார்கள்.

இதனால் அந்த அந்த வருடம் படிப்பில் கொஞ்சம் திணறி தோல்வி அடைந்தேன். ஆனால் மீண்டும் தேர்வு எழுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். பிறகு என்னை ஏதாவது வேலையில் சேர்த்து விடுங்கள் எனக்கு படிப்பதில் விருப்பமில்லை என்று என் சகோதரரிடம் கூறினேன். ஆனால் அவர்கள் நம் வீட்டில் யாரும் படிக்கவில்லை. ஆகையால் நீ டாக்டர் அல்லது ஐஏஎஸ் போன்ற பெரிய படிப்பை படிக்க வேண்டும் எனவும் எனது சகோதரர் கூறினார். ஆகையால் பெரிய பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் என்னை சேர்த்து விட்டார். 

நானும் அங்கு படிக்கும் பணக்கார பசங்களுடன் சேர்ந்து திரைப்படங்களைப் பார்த்து ஊரை சுற்றி வந்து கொண்டு இருந்தேன். இந்த நிலையில் பள்ளி தேர்வு வந்தது. ஆகையால் எனது சகோதரர் மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி தேர்வு கட்டணம் ஆனால் 170 ரூபாயை என்னிடம் கொடுத்தார். நான் எப்படியும் ஃபெயில் ஆகி விடுவேன் என்ற எண்ணத்தில் இருந்ததால் நான் அன்று ஒரு முடிவு செய்திருந்தேன்.

அன்று இரவு யாருக்கும் தெரியாமல் பெங்களூர் ரயில் நிலையத்திற்கு சென்றேன். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ரயில் எங்கு செல்கிறது என்று கேட்டபோது தமிழ்நாட்டிலுள்ள மெட்ராசுக்கு செல்கிறது என்று கூறினார்கள். உடனடியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு அந்த ரயிலில் ஏறி தூங்கி விட்டேன் பிறகு காலை எழுந்து பார்த்தவுடன் ரயில் சென்னை வந்தடைந்தது. 

அப்போது ரயிலை விட்டு வெளியே இறங்கியவுடன் டிக்கெட் கலெக்டர் என்னிடம் டிக்கெட்டை கேட்டார். நான் டிக்கட்டை எங்கேயோ தவற விட்டதால் டிக்கெட்டை மிஸ் செய்துவிட்டேன் என்று டிக்கெட் கலெக்டரிடம் கூறினேன். ஆனால் என்னை அவர் தனியாக நிற்க வைத்து மற்றும் பயணிகளிடம் சோதனை செய்த பிறகு என்னை விசாரித்தார். 

மேலும் அந்த டிக்கெட் கலெக்டர் நான் டிக்கெட் வாங்க வில்லை. பொய் சொல்கிறாய் என்று கூறினார் அதற்கு நான் அண்ட் டிக்கெட் வாங்கினேன் என்று உறுதியாக கூறினேன் ஆனால் எங்கேயோ தவற விட்டு விட்டேன் என்றும் அவரிடம் சொன்னேன். ஆனால் நீ அபராதம் கட்டாமல் இங்கிருந்து செல்ல முடியாது என்று அந்த டிக்கெட் கலெக்டர் என்னிடம் கூறிவிட்டார். 

அப்போது அந்த பக்கம் வந்த கூலித் தொழிலாளிகள் டிக்கெட் கலெக்டரிடம் அந்த பையனை பார்த்தால் பொய் சொல்கிறவன் போல தெரியவில்லை. அவனை அபராதம் கட்ட சொல்கிறீர்களே இது நியாயமா என்று கூறி தங்களிடம் இருந்த பணத்தை அந்த டிக்கெட் கலெக்டரிடம் கொடுத்து அபராதம் கட்டினர்.

அப்போதே முடிவு செய்துவிட்டேன் தமிழ்நாடு தான் எனது ஊர் என்று என ரஜினிகாந்த் தமிழ்நாடு வந்த கதையை கூறினார்.