காஷ்மீர் தீவிரவாதிகளின் புகலிடமாகவும், இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை அனுப்பி வைக்கும் கேட் வே ஆஃப் இந்தியாவாகவும் திகழ்ந்து வருவதாக சரவெடியாக வெடித்துள்ளார் ரஜினிகாந்த்.
காஷ்மீர் தீவிரவாதிகளின் தாய் வீடு! பயங்கரவாதிகளின் கேட் வே ஆஃப் இந்தியா! ரஜினி அட்டாக்!

சென்னையில் இன்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், காஷ்மீர் விவகாரத்தில் மோடி - அமித் ஷாவை கிருஷ்ணர் - அர்ஜூனனுடன் ஒப்பிட்டு பேசியது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ரஜினி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் விவகாரத்தை பொருத்தவரை அவர்கள் ராஜதந்திரம் உடன் கையாண்டுள்ளனர்.
கிருஷ்ணா - அர்ஜூனன் என்றால் ஒருவர் பிளான் கொடுப்பவர், இன்னொருவர் அதனை எக்சியூட் பண்ணுபவர். காஷ்மீர் மிகப்பெரிய விஷயம். இந்த நாட்டுடைய பாதுகாப்பு தொடர்புடைய விஷயம். பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தாய் வீடாக காஷ்மீர் இருக்கிறது.
இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவ கேட் வே ஆஃப் இந்தியாவாக அதாவது ஒரு நுழைவு வாயிலாக காஷ்மீர் இருக்கிறது. இதனால் மத்திய அரசு காஷ்மீர் விஷயத்தை ராஜதந்திரமாக கையாண்டுள்ளது.
மாநிலங்களவையில் மெஜாட்டிரி இல்லை என்பதால் முதலில் அங்கு காஷ்மீர் விவகரத்தை கொண்டு வந்து நிறைவேற்றினர். மேலும் பிரச்சனை ஏற்படுத்துபவர்களை வீட்டுக் காவலில் வைப்பது போல் வைத்தது. முதற்கட்டமாக 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதெல்லாம் ராஜதந்திரம்.
பொதுவெளியில் இது குறித்து விவாதித்திருந்தால் அனைவரும் உஷாராகியிருப்பார்கள். பிரச்சனை செய்பவர்கள் பிரச்சனையை ஆரம்பித்திருப்பார்கள். தமிழகத்தில் சில அரசியல் வாதிகளுக்கு எதை அரசியல் ஆக்க வேண்டும் என்று தெரியவில்லை. சில மதிப்பிற்கு உரிய அரசியல் வாதிகள் இந்த விஷயத்தை புரிந்து கொள்ளாமல் அரசியல் செய்து வருகின்றனர்.
தமிழ்கத்தின் அர்சியல் மையாமாக போயஸ்கார்டன் வருமா ?? கேள்விக்கு காந்திருங்கள் பாருங்கள் என்று தெரிவித்தார். மேலும் சித்திரை ஒன்றாம் தேதி கட்சி அறிவிப்பு வருமா என்கிற கேள்விக்கு அதை முடிவு செய்து கூறுகிறேன் என்று கூறினார்.