விஜய் ரசிகரை துடிக்க துடிக்க அடித்தே கொலை செய்த ரஜினி ரசிகர்..! விழுப்புரம் பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

விஜய் ரசிகரை துடிக்கத் துடிக்க அடித்துக் கொலை செய்த ரஜினி ரசிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் தெருவை சேர்ந்த 22 வயதான யுவராஜ் என்பவர் நடிகர் விஜய் ரசிகர் ஆவார். அதே பகுதியை சேர்ந்த 22 வயதான தினேஷ் பாபு என்பவர் ரஜினி ரசிகர் ஆவார். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்லும் அளவிற்கு இந்த இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் இவர்கள் இருவரும் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து நேரத்தை கழித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் இவர்கள் இருவரும் வீட்டிற்கு அருகே உள்ள ஓரிடத்தில் அமர்ந்து மதுபானம் அருந்தி கொண்டிருந்தனர். அப்போது போதையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசுக்கு அதிக நிதி உதவியை வழங்கியது ரஜினியா அல்லது விஜய்யா என்று இவர்கள் இருவரும் விவாதித்து வந்தனர். போதை தலைக்கு ஏறியதால் சற்று நேரத்தில் இந்த விவாதம் மோதலாக மாறி ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் ரஜினி ரசிகர் தினேஷ் பாபு ஆத்திரம் அடைந்து விஜய் ரசிகர் யுவராஜை பயங்கரமாக தாக்கி கீழே தள்ளி இருக்கிறார். இதனால் கீழே விழுந்த யுவராஜுக்கு தலையில் அடிபட்டது. இதைக்கண்ட தினேஷ் பாபு செய்வதறியாமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

சத்தம் கேட்டு வீட்டிலிருந்து ஓடி வந்த யுவராஜின் பெற்றோர்கள் அவரை தட்டி எழுப்பி பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியில் கதறி அழுதனர். இதைப் பற்றிய சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தினேஷ் பாபுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.