பெண் விவகாரத்தில் பகை! விநாயகர் சதுர்த்தியன்று தீர்த்து கட்டப்பட்ட ரஜினி ரசிகன்! திருச்சி சம்பவம்!

விநாயகர் சதுர்த்தியன்று ரஜினி ரசிகர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சியில் சின்னசெட்டி தெரு எனுமிடம் அமைந்துள்ளது. இந்த பார்த்தசாரதி என்பவர் வசித்து வந்தார். பிளஸ்-2 வரை தேர்ச்சி பெற்ற இவர் வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, இளைஞர்கள் அப்பகுதி பொது மக்களிடம் நன்கொடை வசூலித்து பெரியதொரு விநாயகர் சிலையை வைத்தனர். இந்த விழாக்குழுவில் பார்த்த சாரதி உட்பட கார்த்திகேயன், தினேஷ்மூர்த்தி ஆகியோரும் இருந்தனர். ஏற்கனவே தினேஷ்மூர்த்திக்கும், பார்த்தசாரதிக்கும் பெண் விவகாரத்தில் பகையிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மதியம் இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது வசூலித்த பணத்தை தினேஷ்மூர்த்தி ஏமாற்றியதாக பார்த்தசாரதி குறை கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது அருகிலிருந்த பொதுமக்கள் இவர்களை விலக்கி வைத்தனர்.

இதனிடையே அந்த ஏரியாவில் உள்ள மற்றொரு இளைஞன் பணத்தை ஏமாற்றியது தொடர்பாக தினேஷ்மூர்த்தியிடம் முற்றுகையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்மூர்த்தி யார் கூறியது என்று வினவியுள்ளார். அதற்கு அந்த இளைஞன் பார்த்தசாரதியே தன்னிடம் கூறியதாக கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த தினேஷ்மூர்த்தி நள்ளிரவு ஒரு மணிக்கு பார்த்தசாரதியின் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார். இருவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த தினேஷ்மூர்த்தி பார்த்தசாரதியின் கழுத்தில் குத்தினார். அவனைத் தடுக்க வந்த போது கார்த்திகேயனின் கையில் கத்திக்குத்து விழுந்துள்ளது. 

சம்பவ இடத்திலேயே பார்த்தசாரதி உயிரிழந்தார். கார்த்திகேயனுக்கு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ்மூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.