நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு திருமணம் இன்று ( பிப்ரவரி 11 ) சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஆடம்பரமாக நடைபெற்றது.
மகனை சுமந்து கொண்டு விஷாகனை கரம் பிடித்த சவுந்தர்யா! வைரல் வீடியோ!
பல்வேறு கட்சியின் தலைவர்கள்,நடிகர்கள் திருமணத்திற்கு வருகை தந்ததால் நட்சத்திர விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் போலீசாரின் தீவிர கண்காணிக்கப்பட்டது. வேதங்கள் முழங்க, இசை இசை வாத்தியங்கள் ஒலிக்க சௌந்தர்யா - விசாகன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர் கடம்பூர் ராஜு, அமைச்சர் தங்கமணி,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்,மதிமுக பொது செயலாளர் வைகோ, மு.க.அழகிரி, நடிகர் தனுஷ்,கவிஞர் வைரமுத்து மற்றும் அவரின் மகன் மதன்கார்க்கி,
இசையமைப்பாளர் அனிருத்,நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் வெங்கட், பி.வாசு, இயக்குநர் செல்வராகவன்,நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு, நடிகர் லாரன்ஸ், ,நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால்,நடிகை அதிதி ராவ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா,இயக்குனர் ஹரி,
தெலுங்கு நடிகர் மோகன் பாபு,தமிழருவி மணியன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.