கொளத்தூரில் கெத்து காட்டிய ரசிகர்கள்! உடன்பிறப்புகள் செய்த அட்டூழியம்! டிரெண்டான ரஜினி பயத்தில் திமுக! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

கொளத்தூரில் ரஜினி ரசிகர்களை எதிர்த்து திமுகவினர் செய்த செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


கொளத்தூரில் இருக்கும் பள்ளி ஒன்றை ரஜினி ரசிகர்கள், ரஜினியின் மக்கள் மன்றம் சார்பாக புனரமைத்து மற்றும் சீரமைத்து தந்துள்ளனர். இதனையடுத்து பள்ளியின் வாசலில் கல்வெட்டு ஒன்றை நிறுவியுள்ளனர். அந்த கல்வெட்டில் ரஜினியின் புகைப்படம் பதித்து மக்கள் மன்றம் சார்பில் உறுப்பினர்களின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. கல்வெட்டு பள்ளியின் வாசலில் பதிக்கப்பட்டதால் இணையத்தில் வைரலாகவில்லை . மாறாக திமுகவினர் இதனை எதிர்த்து செய்த செயலால் இன்று சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய செய்தியாக வலம் வருகிறது. 
கொளத்தூர் என்பது திமுகவினரின் தொகுதி. எதிர்க்கட்சித் தலைவரின் தொகுதி தான் கொளத்தூர். இங்கு ரஜினியின் மக்கள் மன்றம் சார்பாக பள்ளியை சீரமைத்து வைக்கப்பட்ட கல்வெட்டை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் . மேலும் அவர்கள் அங்கு இருந்த கல்வெட்டை உடைத்தெறிந்து உள்ளனர். இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் புகைப்படத்தையும் வீடியோவையும் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் . தற்போது இந்த வீடியோ மற்றும் புகைப்படம் ஆனது , உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களால் ட்விட்டர் பக்கத்தில் பெரும் அளவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் #ரஜினி_பயத்தில்திமுக! என்ற ஹேஷ்டேக்கை, ரஜினியின் ரசிகர்களால் உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.