2.0 சாதனை முறியடிப்பு! வெளியாகும் முன்பே வசூலை குவிக்கும் ராஜமவுலியின் புதிய படம்!

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் வர்த்தகத்தை, எஸ்எஸ் ராஜமவுலியின் புதிய படம் முறியடித்துவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.


பாகுபலி 1, 2 படங்களின் மூலமாக, உலக அளவில் பிரபலமடைந்தவர் எஸ்எஸ் ராஜமவுலி. அத்துடன், சினிமா வர்த்தகம், வசூல் சாதனை ஆகியவற்றில் பாகுபலி படம், இந்திய அளவில் புதிய சாதனையையும் படைத்தது. இதனால், எஸ்எஸ் ராஜமவுலி, நம்பர் ஒன் இயக்குனராக மாறியுள்ளதோடு, அவரது புதிய படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. 

இதன்படி, தற்போது ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் நடிப்பில், ஆர்ஆர்ஆர் என்ற படத்தை, ராஜமவுலி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த படம், ஒரு வித்தியாச கதைக் களத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதற்காக, இசையமைப்பாளர் கீரவாணி, சுவாரஸ்யமான வகையில் பிரத்யேக பின்னணி இசை மற்றும் பாடல்களை உருவாக்கி வருகிறாராம். இந்த படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், படத்தின் சேட்டிலைட் வர்த்தகம் பெரும் அளவுக்கு நடைபெற்று, சாதனை படைத்துள்ளதாக, தெரியவந்துள்ளது. மொத்தம், ரூ.132 கோடிக்கு, ஆர்ஆர்ஆர் படத்தின் சேட்டிலைட் உரிமம் விற்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய சினிமா படம் எதுவும் இந்த அளவுக்கு சேட்டிலைட் உரிமம் பெற்றது கிடையாது.

இதற்கு முன், ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தின் சேட்டிலைட் உரிமம், ரூ.108 கோடிக்கு, விற்றதே பெரிய சாதனையாக இருந்தது. அதேசமயம், ஷூட்டிங் நடந்து வரும்போதே, இவ்வளவு பெரிய தொகைக்கு, ஒரு படத்தின் சேட்டிலைட் உரிமம் விற்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.