டூ பீஸ் நீச்சல் டிரஸ் வாங்கிக் கொடுப்பதே எங்க அப்பாவும் - அம்மாவும் தான்..! தீரன் பட நடிகை சொன்ன பகீர் தகவல்!

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் பிகினி அணிந்து நடிக்க தயங்கிய போது தன்னுடைய பெற்றோர்கள் தான் பிகினி வாங்கி கொடுத்து தன்னை உற்சாகப்படுத்தியதாக மனம் திறந்துள்ளார்.


நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகர் கார்த்தியுடன் அவர் இணைந்து நடித்த தீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகை ரகுல் பிரீத் சிங் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகை ரகுல் பிரித் சிங் , தன் வாழ்வில் ஏற்பட்ட சில அனுபவங்களை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

பொதுவாகவே நடிகைகள் என்றாலே எல்லா விதமான ஆடைகளையும் அணிந்து கொள்வதை தங்களுடைய வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிகினி முதல் புடவை வரை அனைத்து விதமான உடைகளையும் அணிந்து நடிகைகள் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ரகுல் பிரீத் சிங், முதல்முறையாக பிகினி அணிய வேண்டும் என எண்ணிய பொழுது சிறிது தயங்கினாராம். அந்நேரத்தில் அவரது தாயார் பிகினி உடையை வாங்கி வந்து தன்னுடைய மகளான ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அளித்திருக்கிறார்.

மேலும் அவரது தந்தையும் இதை அணிந்து கொள் என்று கூறினாராம். இந்த தகவலை பெருமிதமாக நடிகை ரகுல் பிரீத் சிங் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். தற்போது நடிகை ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட என தனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.