உண்மையான ஆம்பளயா நீ? சீமானுக்கு லாரன்ஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார்.


நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அவ்வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ரஜினிகாந்த் பிறந்த நாளை ஒட்டி ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலைப்புலி எஸ் தாணு, கேஎஸ் ரவிக்குமார், பி வாசு ,மீனா, மற்றும் கராத்தே தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகவா லாரன்ஸ், சீமானை மறைமுகமாக நீங்கள்தான் தமிழ்த்தாயின் மூத்த மகனா ?நாங்களெல்லாம் அமெரிக்கா காரணுக்கா பிறந்தோம் என்று கடுமையாக விமர்சித்தார்.

அரசியல் எனும் ஓட்டப்பந்தயத்தில் எல்லாரும் கலந்து கொண்டு ஓடி முடிவில் வெற்றி பெறுபவரே உண்மையான ஆம்பள என்றும் யாருமே ஓடக்கூடாது நான் மட்டும்தான் ஓடி ஜெயிப்பேன் என்று கூறுவது என்ன என்று ராகவா லாரன்ஸ் கூறினார்.

இந்த மேடையில் நான் யாரையும் திட்ட வரவில்லை திருத்த வந்துள்ளேன் எனவும் அதிகார ராகவா லாரன்ஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் பேசும்போது சீமான் அண்ணன் என்று அவரின் பெயரைக் குறிப்பிட்டதும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் வேண்டாம் வேண்டாம் என்று கத்தி கூச்சல் இட்டனர். ரஜினிகாந்த் பிறந்தநாளில் சீமானை கடுமையாக விமர்சித்த ராகவா லாரன்ஸின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.