விமானத்தில் ரசிகர் ஒருவர் தனக்கு விருப்பம் இல்லாத செய்த செயலால் அதிர்ச்சி அடைந்ததாக கபாலி பட நாயகி ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
உறங்கிக் கொண்டிருந்தேன்..! செல்போனை வைத்துக் கொண்டு அருகே அமர்ந்திருந்த ஆண் செய்த செயல்! விமானத்தில் நடிகைக்கு ஏற்பட்ட பகீர் அனுபவம்!
தமிழ்த் திரையுலகில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் பிரபலம் ராதிகா ஆப்தே. இவர் ரஜினிகாந்த்துடன் கபாலி படத்திலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையான ராதிகா ஆப்தே லண்டனைச் சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்பவரை முன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் ராதிகா ஆப்தே தற்போது ஊரடங்கு காரணமாக லண்டனில் வசித்து வருகிறார்.
தற்போது ரசிகர்களுடன் பேசிய அவர் ஊரடங்கு நேரத்தில் பொது மக்கள் வெப்சீரிஸ்களை அதிகம் பார்க்கத் தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். லண்டனில் வசிக்கும் மக்களும் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். தன்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது என ரசிகர்கள் கூறுவதாக பெருமிதம் கொள்கிறார். இந்நிலையில் விமான பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், விமானத்தில் இருந்தபோது, ரசிகர் ஒருவர் என்னருகில் வந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஆனால் நான் அசதியாக இருந்ததால் நான் மறுத்துவிட்டேன். பின்னர் தூங்கிவிட்டேன். பின்னர் கண் விழித்து பார்த்தபோது, அந்த நபர் செல்போனை என்னருகில் வைத்து செல்பி எடுக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை நான் கண்டித்தேன் என தெரிவித்தார். ராதிகா ஆப்தே லண்டனில் இவர் தி ஸ்லீப்வாக்கர்ஸ் என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். இதில் சஹானா கோஸ்வாமி, குல்ஷன் தேவையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கணவர் பெனிடிக்ட் டெய்லர் இசை அமைத்துள்ளார். இப்படம் பாம்ஸ் ஸ்ப்ரிங் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபெஸ்ட் என்ற குறும்பட விழாவில் சிறந்த குறும்படம் விருதை பெற்றுள்ளது.