தொடைக்கு மேலே பச்சை குத்திக் கொண்ட கபாலி நடிகை! யார் பெயர் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடன் கபாலி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ராதிகா ஆப்தே.


இவர் தன்னுடைய குழந்தை தனமான முகத்தின் மூலம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பாலிவுட்  சினிமாவிலும் மாஸ் காட்டும் நடிகைகளில் ஒருவர். இவர் நடித்த  அந்ததுன்  மற்றும் பத்மன் போன்ற திரைப்படம் இவரருக்கு வெற்றி படங்களாக அமைந்தது என்றே கூறலாம்.

சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே, உணர்வு பூர்வமாக ஒரு செயலை செய்தார்.  அது அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.  விழாவில் கலந்து கொண்ட இவர், சாம்பல் நிறத்தில் மிக பெரிய கட் வைத்த ஆடையை அணிந்திருந்தார்.  அப்போது அவரது தொடையில் "B " என்ற எழுத்து பச்சை குத்தபட்டது தெரியவந்தது. 

இந்த எழுத்து யாரை குறிக்கிறது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. அப்போது தான் தெரிய வந்தது அது வேறு யாரும் இல்லை அவரது கணவர் "பெனிடிக்ட் டைலர் " பெயரின் முதல் எழுத்து என்று. நடிகை ராதிகா ஆப்தே மற்றும் பிரிட்டிஷ் பாடகர் பெனிடிக்ட் டைலர் ஆகிய இருவரும் கடந்த 2012 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் பணி நிமித்தமாக பிரிந்து இருக்கும் சூழல் நிலவுகிறது.

இருப்பினும் இருவரும் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் சந்தித்து கொள்வர். அதிகமாக இருவரும் மும்பை அல்லது லண்டனில் தங்களது சந்திப்பை வைத்து கொள்வர்.