பல தடைகளை தாண்டி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். துணிந்து களத்தில் நின்று போராடிக்கொண்டு இருக்கிறார் … எடுத்துக்காட்டு சார் நீங்க..!

கொரோனா தொற்று வந்துவிட்டால், ஏதோ உயிரே போய்விடும் என்பது போல் தனியார் மருத்துவமனையைத் தேடியோடும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் வித்தியாசமானவராகத் திகழ்கிறார் ராதாகிருஷ்ணன்.


ஆம், மனைவி, மகன், மாமியார், மாமனார் ஆகியோருக்கு கொரோனா தொற்று வந்ததும் எந்த தனியார் மருத்துவமனையையும் நாடாமல், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி கிங் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அதோடு, குடும்பத்துக்கு நோய் வந்துவிட்டது என்ற அச்சம் இன்றி கொரோனா நோய் தடுப்பு பணிகளில் துணிந்து களத்தில் நின்று இப்போதும் போராடிக்கொண்டு இருக்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன். இந்த மன உறுதியைப் பார்க்கும் மக்கள் கொரோனாவைக் கண்டு அச்சம் தவிர்ப்பார்கள் என்பது உறுதி. 

எப்போதுமே தான் மேற்கொள்ளும் பணியில் ஆத்மார்த்தமாக ஈடுபடுபவர் என்பதை, 2004 சுனாமி காலத்திலேயே நிரூபித்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். கொரோனா காலத்திலும் தொடரும் அவரது சேவைக்கு தமிழக மக்கள் சார்பில் பாராட்ட வேண்டியது அவசியம். சல்யூட் சாரே.