ஆர்.ஜே.பாலாஜிக்கு ஏற்பட்ட சோகம்..! பிரைவேட் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவரது அம்மா.! என்னாச்சு தெரியுமா?

பிரபல ஆர்.ஜே. மற்றும் நடிகர் ஒருவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் இன்றுவரை 64,603 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 35,500 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 833 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு  முழுவதும் தற்போது சில தளர்வுகள் உடன் ஜுன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இன்றுவரை சென்னையில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு பேர் குணமடைந்துள்ளனர். 

இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்திய திரையுலகமே கடந்த சில மாதங்களாக ஈடு செய்ய முடியாத இழப்புகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் கோலிவுட் திரையுலகில் பழம்பெரும் பாடகரான ஏ.எல்.ராகவன் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தார். அவருடைய மனைவி மற்றும் பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் நோய் தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் ஆர்.ஜே. ஆக செயல்பட்டு வந்த ஆர்.ஜே.பாலாஜியின் தாயாருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடித்துவந்த "மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியானது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.