பஞ்சாப் அணியை மிரட்டிய டி வில்லியர்ஸ் ! கடைசி இடத்திலிருந்து முன்னேறிய RCB!

கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான IPL போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற கிங்ஸ் XI பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பார்திவ் படேல் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மிகவும் எதிர் பார்க்கப்பட்ட கோஹ்லி 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.சிறப்பாக ஆடி கொண்டிருந்த பார்திவ் படேல் 43 ரன்களை எடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய டீ வில்லியர்ஸ் மற்றும் ஸ்டோனிஸ் ஜோடி கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர்.

குறிப்பாக டி வில்லியர்ஸ் எதிரணியின் பந்து வீச்சை சிக்சர், பவுண்டரிகளாக  நொறுக்கினார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்து 202 ரன்களை எட்டியது.அதிரடியாக ஆடிய டீ வில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் விளையாடிய ஸ்டோனிஸ் 46 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு  202 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய கிங்ஸ் XI பஞ்சாப் அணி முதல் 15 ஓவர்களில் சிறப்பாக ஆடியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 185 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பூரான் 46 ரன்களும், ராகுல் 42 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியின் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டைகளை வீழ்த்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு காரணமான டீ வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலமாக கடைசி இடத்திலிருந்த RCB ஒரு இடம் முன்னேறி 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.